அருள்: கடவுள் அல்லது மனிதனால் வழங்கப்படும் ஆசீர்வாதம். §
அற்புதம்: இறைவனால் அல்லது தெய்வத்தால் நிகழ்த்தப்பட்ட அதிசய நிகழ்ச்சி§
அட்டாங்க நமஸ்காரம்: ஆண்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல், நெற்றி தரையில் படும்படியாக முகம் தரையை நோக்கி இருத்தல். கடவுளுக்கு மரியாதை காட்டும் ஒரு வழி.§
அர்ச்சகர்: கோயில் அல்லது பூசையறையில் இறைவனுக்குப் பூசை செய்ய தகுதி பெற்றவர்.§
ஆன்மா: இறவா தன்மையுள்ள உன் உள்ளிருக்கும் ஒளி உடல்.§
இந்தியா: உலகின் பெரும்பான்மை இந்துக்கள் வாழும் ஆசிய நாடுகளில் ஒரு பெரிய நாடு.§
இந்து: இந்து பெயர் கொண்ட இந்து சமயத்தைப் பின்பற்றும் ஒருவர்§
இந்து சமயம்: உலகின் மிகத் தொன்மையான சமயம். உலகம் முழுதும் குறிப்பாக இந்தியா, நேப்பாளம் உட்பட மொத்தம் நூறு கோடி மக்கள் இச்சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.§
இராஜ இராஜ சோழன்: தென் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புகழ் வாய்ந்த ஓர் அரசர்.§
ஓம்: பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் ஓதப்படும் புனித மந்திர ஒலி§
கணேசர்: யானை முகக் கடவுள் §
கடவுள்: சிவபெருமான், மேலான பரம்பொருள்§
கடவுளர்: சிவபெருமானால் படைக்கப்பட்ட சொர்க்கவாசிகளான கணேசப் பெருமான் முருகப் பெருமான் ஆகியோரையும் குறிக்கும்§
கர்ம வினை: ஒரு செயலின் பிரதிபலனாக மறு செயல் நியதி§
கும்பம்: தேங்காய் மற்றும் மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்ட குடம்§
குங்குமம்: மஞ்சளினால் செய்யப்பட்ட சிவப்பு நிறமான தூள். நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்ளக் கூடியது§
குரு: கடவுளருகே நம்மை இட்டுச் செல்வதற்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் ஞானம் பெற்ற மகான்§
கோபுரம்: நெட்டு உயர்ந்திருக்கும் கோயிலின் வாசல்§
கோலம்: அரிசி மாவினால் நிலத்தில் வரையப்படும் சித்திர வேலைப்பாடு§
சந்தனம்: பூசைக்குப் பயன்படும் ஆரஞ்சு நிறத்திலான சந்தனக் தூள் அல்லது சந்தனக் கட்டையைக் குழைத்த சாந்து§
சற்குரு: கடவுளிடம் அணுக்கமாக இருந்து மற்றவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் ஒரு மத போதகாசிரியர்§
சிவன்: முழுமுதற் கடவுள்§
சி.என்.என்: உலகத் தொலைக் காட்சி செய்தி அலை வரிசை.§
சிவலோகம்: சிவபெருமானும் மகாதேவர்களும் இருக்கும் மேலான சொர்க்கலோகம்.§
சூடம்: சூட மரத்திலிருந்து எடுக்கப்படும் வெண்பொருள். பூசையின்போது கோயிலில் கொளுத்தப்படுவது.§
சைவம்: சைவசமயத்தைக் குறிப்பது. முழுமுதற் கடவுளாம் சிவபெருமானை வணங்குபவர்களை சைவர்கள் அல்லது சைவ சமயத்தவர் என்று கூறுவர்.§
ஞானி: ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்த மிகத் தூய்மையும் புனிதத் தன்மையும் கொண்ட ஒருவர்.§
தாராள (குணம்): பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் பண்பு. §
திருநாரையூர்: தென் இந்தியாவில் நம்பி என்னும் ஞானிசிறுவனாக இருந்த போது வாழ்ந்த ஊர்.§
திருவிழா: ஒவ்வோர் ஆண்டும் கோலாகலமாக இறைவனை வழிபடும் முக்கியமான சிறப்புத் திருநாள்.§
தெய்வம்: வீட்டில் அல்லது கோயிலில் இருக்கும் தெய்வ விக்கிரகம் அல்லது தெய்வ படம்.§
துவஜஸ்தம்பம்: கோயில் முன் இருக்கும் கொடிக் கம்பம்.§
தைப்பூசம்: முருகப் பெருமானுக்குரிய மிகப் பெரிய விழா.§
நந்தி: சிவபெருமான் (சவாரி செய்யும்) ஏறிவரும் பெரிய வெள்ளை எருது.§
நமசிவாய: சமஸ்கிரத மொழியில் "சிவபெருமானே போற்றி" என்று கூறப்படுவது.§
நம்பி: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ஞானி.§
நைவேத்தியம்: கடவுளுக்கு மனப் பூர்வமாக அளிக்கப்படும் பரிசு.§
பலிபீடம்: கோயில் கொடி மரத்தின் அருகே இருக்கும் தட்டையான மேற்புறத்தைக் கொண்ட தாமரை வடிவிலான ஒரு கருங்கல்.§
பக்தன்: கடவுளை மிகவும் நேசிக்கும் ஒருவர்.§
பஜனை: கடவுளுக்காகப் பாடப்படும் பாடல்.§
பாக்கு: பாக்கு மரத்தில் காய்க்கும் ஒருவகைக் கொட்டை, தாம்பூலம் தரிக்க உதவும். கோயில் காணிக்கைப் பொருள்.§
பி.பி.சி.: பிரிட்டிஷ் ஒலி, ஒளி பரப்புக் கழகம்.§
பிரசாதம்: கோயிலில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு கொடுக்கப்படும் விபூதி, தீர்த்தம், சந்தனம், குங்குமம், மலர்கள் முதலியன.§
பிரபஞ்சம்: சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் உள்ள இடம். கிரகங்கள், நட்சத்திரங்கள், வான் முதலியவற்றை உள்ளடக்கிய சிருஷ்டிகள் (படைக்கப்பட்டவை) உள்ள இடம்.§
புனித வெண்ணீறு: பார்க்க: விபூதி§
புனிதம்: இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட அல்லது இறைவனின் முழு புனித சக்தி வாய்ந்தது.§
பூஜை: கடவுளை வணங்குவதற்கான ஒரு சடங்கு. மந்திரம் கூறுதல், சூடம், சாம்பிராணி, அகர்பத்தி, விளக்கு, நீர், உணவு மலர்கள் முதலியன உள்ளடங்கியதாகும்.§
பூசை மாடம்: கடவுள் படம் அல்லது விக்கிரகம் வைக்கப்பட்டு வழிபாடு செய்யும் இடம்.§
பெரியோர்: நம்மைவிட வயதில் மூத்தவர்கள். தாத்தா, பாட்டி, மாமன், மாமி, அண்ணன், அக்காள் போன்றோர்.§
பெருமான்: சிவபெருமான் அல்லது கடவுள். அல்லது கணேசப் பெருமான் முருகப் பெருமான் போன்றகடவுள்.§
மகாதேவர்: சமஸ்கிரத மொழியில் சிவபெருமான் அல்லது கடவுள். கணேசர், முருகன் ஆகியோரையும் குறிக்கும்.§
மகா சிவராத்திரி: ஓர் ஆண்டில் சிவபெருமானுக்குரிய மிகப் பெரிய விழா.§
மந்திரம்: திருமறைகளில் உள்ள சொல் அல்லது வாக்கியம்.§
மதம் (சமயம்): நல்ல மனிதனாக வாழவும் கடவுளை வணங்குவதற்குமான வழி அல்லது பாதை. புத்த மதம், இந்து மதம் ஆகியவற்றை மதங்கள் (சமயங்கள்) எனலாம்.§
மயில்: இந்தியாவில் சாதாரணமாகக் காணப்படும் பல வண்ண நிறத்திலான பெரிய பறவை.§
மா: வெப்ப மண்டல பழ மரம். இதை மாமரம் என்கிறோம். இதன் இலைகலை வீடுகளிலும் கோயில்களிலும் விழாக் காலங்களில் அலங்காரம் செய்யப் பயன்படுத்துகிறோம்.§
முருகன்: சிவபெருமானின் கணேசருக்கு அடுத்த அவரது இரண்டாவது மகன். வேல் ஏந்தி மயில் மீது ஏறி வரும் சக்தி வாய்ந்த பெருமான்.§
மோதகம்: கணேசருக்குரிய உருண்டை வடிவிலான இனிப்புப் பலகாரம்.§
வடை: தென்னிந்தியாவில் மிகப் பிரபல்யமான சிறிய தட்டை உருண்டை வடிவிலான கடலைப் பருப்பை அறைத்துப் பொரித்த பலகாரம்.§
விசார்ஜனா: கணேசப் பெருமானுக்குரிய பெரிய விழா.§
வெற்றிலை: ஒரு கொடி இனத்தைச் சேர்ந்த இலை. கோயில் காணிக்கைப் பொருள். தாம்பூலம் தரித்துக் கொள்ள உதவும்.§
யோகம்: நமது மனத்தையும் உடலையும் அமைதிபடுத்தும் வழி. மந்திரம் ஜெபித்தல், அசையாமல் உட்கார்ந்திருத்தல், நமது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி தியானம் செய்தல், முதலியவற்றை உள்ளடக்கியது யோகமாகும்.§
ஜெபித்தல்: எளிமையான முறையில் பிரார்த்தனை செய்வது அல்லது பாடுவது.§
ஜெயம்: வெற்றி, வரவேற்பு, வாழ்த்துரை, சிறப்பிக்கும் ஒருசொல்.§
ஸ்கந்த சஷ்டி: முருகனுக்குரிய ஆறு நாள் விழா.§
குறிப்பு: மேற்கண்ட சொற்கள் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்றே விவரிக்கப்பட்டுள்ளன.§