When his father came home, Nambi told him what had happened. But the father did not believe it. So Nambi took his father to the temple. There Nambi did the puja and again offered food. His father was amazed to see Ganesha eat it. The story of Nambi traveled far and wide. Later in life he discovered hidden holy texts with the help of King Rajaraja Chola. Nambi became a great saint and lived many years. §
தகப்பனார் வீடு திரும்பியதும் நடந்ததைக் கூறினான் நம்பி. ஆனால் நம்பி கூறியதை தகப்பனார் நம்ப வில்லை. எனவே அவரைக் கோயிலுக்குக் கூட்டிச் சென்றான் நம்பி. மீண்டும் பூசை செய்து உணவைப் படைத்தான். கணேசப் பெருமான் நேரில் வந்து உணவை உண்பதைக் கண்ட தகப்பனார் பேராச்சரியமடைந்தார். நம்பியின் கதை எங்கும் பரவியது. வாழ்வின் பிற்பகுதியில் நம்பி இராஜ இராஜ சோழ மன்னனின் உதவியுடன் மறைந்து கிடந்த தேவாரச் சுவடிகளைக் கண்டு பிடித்தார். நம்பியாண்டார் நம்பி பெரிய மகானாக வளர்ந்து பல்லாண்டுகள் வாழ்ந்தார்.§
Apabila bapanya pulang, Nambi menceritakan apa yang telah berlaku. Tetapi bapanya tidak mempercayainya. Maka Nambi membawa bapanya ke kuil. Di situ Nambi melakukan puja dan mempersembahkan makanan sekali lagi. Bapanya terkagum melihat Tuhan Ganesha memakan makanan itu. Cerita Nambi tersebar dengan meluas ke merata-rata tempat. Setelah dewasa, dengan pertolongan Rajaraja Chola, Nambi menjumpai kitab-kitab suci yang tersembunyi. Nambi menjadi seorang Nayanar yang terkenal dan hidup hingga ke usia yang tua.§
Lorsque son père revint, Nambi lui raconta ce qui s’était passé. Mais le père ne voulut pas croire son fils. Alors Nambi l’emmena au temple, il fit à nouveau une puja et il offrit de la nourriture. Le père n’en croyait pas ses yeux lorsqu’il vit Ganesha manger ce qui lui était offert. L’histoire de Nambi se répandit très loin. Plus tard, avec l’aide du Roi Rajaraja Chola, Nambi devait découvrir d’anciens textes sacrés. Il devint un grand saint et il vécut de longues années.§