மாணவர்களுக்கு: சைவ இந்து சமய புத்தகம் 2 உங்களை வரவேற்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இந்நாட்களில் அதிகமான விஷயங்களைக் கற்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீங்கள் எழுதப் படிக்க, கணக்கில் கூட்டல் கழித்தல் மற்றும் உங்கள் நாட்டு வரலாற்றோடு மற்ற பாடங்களும் கற்கிறீர்கள், மிகமுக்கியமான பாடங்களோடு இந்த சமய புத்தகத்தையும் (உங்கள் சமயம்) நீங்கள் கற்கவிருக்கிறீர்கள். இங்கு மூன்றாம் புத்தகத்தில் நீங்கள் இந்து சமயத்தின் அடிப்படை விஷயத்தைக் கற்கவிருக்கிறீர்கள். நமது எல்லாம் வல்ல இறைவனான சிவபெருமான், முருகப் பெருமான் மற்றும் கணேசப் பெருமான் மற்றும் உங்களது ஆன்மாவை பற்றியும் கற்பீர்கள். கோயிலில் வழக்கமாக நடைபெறும் சமயச் சடங்குகள் பற்றியும் ஒவ்வொன்றையும் நாம் ஏன் செய்கிறோம் என்பன பற்றியும் கற்கவிருக்கிறீர்கள். நீங்கள் கர்மவினை, அஹிம்சை, வன்முறையின்மை முதலியவற்றோடு மேலும் பலவற்றைக் கற்பீர்கள். இந்து சமயம் நடைமுறையில் பின்பற்றக் கூடிய சமயமாகும். நீங்கள் நல்ல மாணவராகவும் நாட்டின் நல்ல குடிமகனாகவும் இருக்கச் செய்யும். பள்ளியில் படிக்கும் பாடங்களை முழுமூச்சாகப் படிப்பது போன்று உங்கள் சமயத்தையும் பயிலுங்கள். நமது சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்கள் முதலியவற்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.§
ஆசிரியர்களுக்கு: இப்புத்தகம் 6 முதல் 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காகத் திட்டமிட்டு எழுதப்பட்டது. நீங்கள் ஓர் ஆசிரியராதலால் இப்புத்தகத்திலுள்ள அனைத்து வார்த்தைகளும் உங்கள் மாணவர்கள் விளங்கி கொள்வதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசக் கூடியவர்களாயின் அம்மொழிகளில் எழுதப்பட்டவற்றையும் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் அர்த்தங்கள் அவர்கள் மனத்தில் நன்கு பதிந்து கொள்ள ஏதுவாயிருக்கும். மாணவர்களைக் கேள்விகள் கேட்கத் தூண்ட வேண்டும். கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியாவிடில் எனக்கு எழுதினால் உடனடியாகப் பதில் தருகிறேன். இப்புத்தக சம்பந்தமாக மேலும் அதிகத் தகவல் வேண்டுமாயின் இந்த அகப்பக்கத்துக்குச் செல்லுங்கள். www.himalayanacademy.com/teaching/ இதில் கிடைக்கும் தகவல்கள் உங்கள் போதனைக்கு உதவியாயிருக்கும். இவ்வகப் பக்கத்தில் ஆசிரியர் கையேடு, மேலும் அதிகத் தகவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வீடியோ கெசட் முதலியன கிடைக்கும். மலேசியா. மொரிஸியஸ் உட்பட பெரும்பாலும் சமய வகுப்புகள் நடைபெறும் நாடுகளுக்காக இப்புத்தகம் ஆங்கிலம், தமிழ், மலாய், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்படி ஆலோசனை கூறப்படுகிறது. இதன்வழி அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதோடு போதனை உபகரணங்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.§
பெற்றோர்களுக்கு: இது உங்கள் குழந்தை மேற்கொள்ளும் மிக முக்கியமான கல்வியாகும். இது ஆதி அந்தமில்லாத நிரந்தரமான சனாதன தர்மம் எனப்படும் இந்து சமயக் கல்வியாகும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சமயக் கல்வி முக்கியமில்லை என்றும் தங்கள் குழந்தைகள் பள்ளிப்பாடங்களில் அதிகக் கவனம் செலுத்தினால் போதும் என்று நினைக்கின்றனர். இச்சமய பாடத்தை சிறந்த முறையில் அணுகினால் இந்நூலில் இந்து சமயக் கருத்துக்கள் நடைமுறைக்கேற்றவாறு கூறப்பட்டுள்ளது என்பதால் மாணவர்களின் பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது திண்ணமாகத் தெரியும். குழந்தைகளுக்கு அதிக அளவிலான மகிழ்ச்சியும் குறைந்த மன இருக்கமான வாழ்க்கையையும் தரும். தயவு செய்து உங்கள் குழந்தை மூன்றாம் புத்தகத்திலுள்ள எல்லா பாடங்களையும் படிக்க உற்சாகமூட்டுங்கள். உங்களுக்கு நேரமிருப்பின் அகப்பக்கத்துக்குச் சென்று ஆசிரியருக்கான பாடசம்பந்தமானவற்றைப் படித்துப் பாருங்கள். உங்கள் குழந்தையின் ஆன்மாவுக்கும் மனதுக்கும் என்றும் பயிற்சி பெற்று உங்கள் குழந்தை சமயத்தைத் தெரிந்து கொள்ள, தங்கள் அறிவைப் பயன்படுத்தி பயிற்சி செய்யவும், வாழ்க்கையில் மிகத்துன்பத்தையும் கெட்ட பண்புகளையும் எதிர்நோக்கும் போது தெய்வீகப் பாதையில் செல்ல இப்பாடங்கள் தயார்படுத்துகிறதென்றும் நினைத்துப்பாருங்கள். இப்பாடங்களைப் படிக்க உற்சாகமூட்டுங்கள், அவர்களது கல்விக்கு நீங்கள் உதவுங்கள். இந்நடவடிக்கையினால் ஒரு வேளை நீங்கள் கூட புதியனவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.§
சற்குரு போதிநாதா வேலன் சுவாமி
நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையின்
163 வது ஜகதாச்சாரியர்
குருமகாசந்நிதானம்
கவாய் ஆதீனம் ஹவாய், ஐக்கிய அமெரிக்கா.§